தளபதி 66 பட கதாநாயகிக்கு கோடிக்கணக்கில் சம்பளம்.. யார் அந்த நடிகை தெரியுமா
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 66.
வம்சி இயக்கவிருக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ஏற்கனவே இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிவிட்டது.
ஜோடியாக நடிக்கப்போவது யார்
ஆனால், இதுவரை இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
ஆனால், ராஷ்மிகா தான், விஜய் படத்தின் கதாநாயகி என்று தகவல் வெளியானது. ஆனால், இதுவரை படக்குழு அதனை உறுதிசெய்யவில்லை.
இதன்பின், பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றிலிருந்து திஷா பாட்னி என்று கூறப்பட்டு வருகிறது.
கோடிக்கணக்கில் சம்பளம்
இந்நிலையில், இதில் கீர்த்தி சனோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரூ. 4 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம், படக்குழுவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
