தளபதி 67 டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்கப்பட்டதா! வசூல் சக்ரவர்த்தி நடிகர் விஜய்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் பரவி வருகிறது.

தளபதி 67
இதற்கிடையே தற்போது இன்னும் ஷூட்டிங் கூட தொடங்காத நிலையில் தளபதி 67 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் ரூ. 150 கோடிக்கு இறுதி செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இதன்முலம் இப்படத்தின் வியாபாரம் மட்டும் ரூ. 400 கோடிக்கு இருக்கும் என சொல்ப்படுகிறது.

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! போட்டோவுடன் இதோ.