The Roundup: Punishment திரை விமர்சனம்
கொரியன் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் நம்ம ஊர் விஜய், அஜித் போல் செம மாஸ் ஹீரோவாக கொரியன் சினிமாவில் வலம் வருபவம் டான் லீ.
இவரின் Outlaws திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய வெற்றியை பெற, இதன் 4-வது பாகமாக தற்போது The Roundup: Punishment வெளிவந்துள்ளது. அந்த படம் எப்படியுள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு சிறுவனை துடிக்க துடிக்க வில்லன் கேங் கொல்கிறது. இதன் பின் என்ன என்று விசாரிக்க நாயகன் டான் லீ களத்தில் இறங்குகிறார். அதோடு இறந்த சிறுவனின் தாய்க்கு உங்கள் மகன் இறப்பிற்கு நியாயம் வாங்கி தருவேன் என்று சத்தியம் செய்கிறார்.
நம் தமிழ் படம் போலவே சத்தியத்திற்காக அந்த வில்லன் கேங்கை தேடி செல்கிறார். இதில் மிகப்பெரும் illegal casino மூலம் பல ஆயிரம் கோடி பணம் அரசாங்கத்திற்கு தெரியாமல் வில்லன் கேங் சம்பாதித்து வருகிறது.
இதில் சில சிறுவர்களையும் உட்படுத்த, இந்த கேங்-யை தேடி டான் லீ போக, அவர்களை பிடித்தாரா என்பதன் அதிரடியே இந்த The roundup: punishment.
படத்தை பற்றிய அலசல்
டான் லீ ஒற்றை ஆளாக மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார். வழக்கம் போல் தன் பாக்ஸிங் கிக்-ல் பட்டாசு கிளப்புகிறார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தன் ஒற்றை Punch-ல் அடித்து தும்சம் செய்கிறார்.
அதிலும் இந்த கேங்-யை பிடிக்க ஒவ்வொருத்தரையும் விசாரிக்கம் இடம், அதோடு தன் நண்பனையே பகடை காயக்கி, அவரை போலிஸ் டார்க் அகடாமி என ஏமாற்றி டான் லீ செய்யும் திட்டமெல்லாம் செம ரகளை.
[YPNQZF ]
ஒரு படத்திற்கு மிகப்பெரும் பலமே வில்லன் கதாபாத்திரம் தான். அது அமைந்தாலே படம் தானாக மேலே எகிறும். அதை உறுதிப்படுத்தும் வகையில் 3 பாகம் போலவே 4வது பாகத்திலும் வில்லன் கதாபாத்திரம் நடுங்க வைக்கிறது. சிறுவன் என்று கூட பார்க்காமல் குத்தி கொள்வது.
என்ன தான் நண்பன் என்றாலும் பிஸினஸில் ஏமாற்றினால் எந்த பதவியாக இருந்தாலும் தேடி கொள்வது என மிரட்டியுள்ளார். ஆனால், சிங்கம் சீரிஸியஸில் 3 வது பாகமே கொஞ்சம் சோதிக்க, இதில் 4வது பாகமும் பெரிய வெற்றி பெற்றது.
ஆனாலும், மற்ற 3 பாகத்தில் இருந்த விறுவிறுப்பு, படபடப்பு இதில் கொஞ்சம் மிஸ்ஸிங் தான். அடுத்தடுத்த பாகம் வந்தால் இந்த Franchise கொஞ்சம் நீர்த்து போக வாய்ப்புள்ளது.
க்ளாப்ஸ்
டான் லீ ஒற்றை ஆளாக மாஸ் காட்டுகிறார்.
சண்டை காட்சிகள்.
பல்ப்ஸ்
இது தான் நடக்கப்போவது என்ற ஏற்கனவே தெரியும் காட்சி அமைப்புக்கள்.