இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ
ஒவ்வொரு புதிய திரைப்படங்களை திரையரங்கில் எப்படி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதே போல் அப்படத்தை ஓடிடியில் பார்த்து ரசிக்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து பார்க்கலாம் வாங்க.
குடும்பஸ்தன்
மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மாதம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், பாலாஜி சக்திவேல், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வருகிற 28ம் தேதி ஜீ 5 ஓடிடியில் வெளியாகிறது.
பாட்டில் ராதா
குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்து தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பாட்டில் ராதா. குடிப்பழக்கத்தால் அடிமையாகி இருக்கும் நபரின் வாழ்க்கையிலும், அவரது குடும்பத்திலும் ஏற்படும் விஷயங்களை நகைச்சுவை கலந்து சொன்ன திரைப்படம் இது. மக்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.
சூழல் 2: The Vortex
தமிழில் வெளிவந்த தரமான வெப் சீரிஸ்களில் ஒன்று சூழல்: The Vortex. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த வெப் சீரிஸ் கடந்த 2022ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்து வெற்றியடைந்தது. இந்த வெப் தொடரை புஷ்கர் & காயத்ரி உருவாக்கியிருந்தனர். மேலும், பிரம்மா ஜி மற்றும் அனுசன் முருகையன் இயக்கியிருந்தார்.
இதனுடைய இரண்டாம் பாகம் வருகிற 28ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்! IBC Tamilnadu
