பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய தக் லைஃப்.. தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல்
தக் லைஃப்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் திரைக்கு வந்தது தக் லைஃப். மணி ரத்னம் - கமல் ஹாசன் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
மேலும் இப்படத்தில் கமலுடன் முதல் முறையாக சிம்பு நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.

மணி ரத்னம் - கமல் சேர்ந்து இப்படியொரு ஏமாற்றத்தை தருவார்கள் என எதிர்பார்க்கவில்லை என கடுமையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தக் லைஃப் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாள் நல்ல வசூல் வந்த நிலையில், அதன்பின் வசூலில் தக் லைஃப் அடிவாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu