பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா
தக் லைஃப்
கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த ஜூன் 5ம் தேதி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும் நெட்டிசன்கள் இப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
வசூல் விவரம்
இந்த நிலையில், 11 நாட்களை கடந்திருக்கும் தக் லைஃப் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 90 மட்டுமே வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு இறுதி வசூலாக இருக்கக்கூடும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஐபோன் 17 அறிமுகத்திற்கு முன்பு.., iPhone 16 போனின் விலை Flipkart மற்றும் Amazon-ல் குறைப்பு News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
