ஐந்து நாட்களில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி
தக் லைஃப்
கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணி என்றாலே நம் அனைவருக்கும் நாயகன் திரைப்படம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு நம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை அப்படம் ஏற்படுத்தியது.
இப்படத்திற்கு பின் இவர்கள் இருவரும் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தக் லைஃப் படம் வந்தது.

38 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில் மணி ரத்னம் - கமல் ஹாசன் கூட்டணி அமைக்க சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த ஜூன் 5ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இதனால் பாக்ஸ் ஆபிசில் தற்போது படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஆம், ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 82 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவான வசூல் ஆகும். இதனால் படுதோல்வியை தக் லைஃப் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri