7 நாட்களில் தக் லைஃப் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தக் லைஃப்
கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தில் கமலுடன் இணைந்து முதல் முறையாக சிம்பு நடித்திருந்தார்.
மேலும் த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த தக் லைஃப், அவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தந்தது.
கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம், ட்ரோல்கள் மறுபக்கம் என இப்படம் சந்தித்தது. முதல் நாள் நல்ல வசூல் ஈட்டிய தக் லைஃப், அதன்பின் படுமோசமான சரிவை பாக்ஸ் ஆபிஸில் சந்தித்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், 7 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 86 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் வசூல் ரீதியாக படுதோல்வியடைந்துள்ளது.

மருத்துவர்கள் விடுதியில் புகுந்த விமானம்; முன்னாள் முதல்வர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் படங்கள் IBC Tamilnadu

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan
