இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்: தக் லைஃப் படம் குறித்து கமல் ஹாசன் வெளியிட்ட அறிவிப்பு
தக் லைஃப்
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார்.
முதல் முறையாக இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
கமல் வெளியிட்ட அறிக்கை
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வருகிற 16ம் தேதி நடக்கவிருந்தது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், தங்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவை தள்ளிவைக்கிறோம், என கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இசை வெளியிட்டு விழா எப்போது நடக்கும் என்கிற புதிய தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவர் அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
