ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த கமல்ஹாசனின் தக் லைஃப் பட டிரெய்லர் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.
இவர் நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டிரெய்லர் ரிலீஸ்
இப்படம் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, வரும் 17 - ம் தேதி 'தக் லைப்' படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. மேலும், வரும் 24-ந் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறும் என்றும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லைவ் பர்பாமென்ஸ் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
