ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையில் தக் லைஃப்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
தக் லைஃப்
இயக்குநர் மணி ரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் 38 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார்.

மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ப்ரீ புக்கிங்
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே இப்படத்தின் ப்ரீ புக்கிங் உலகெங்கும் துவங்கிவிட்டது. இதுவரை ப்ரீ புக்கிங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரிலீஸுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தக் லைஃப் திரைப்படம் இதுவரை நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri