கேஜிஎப் 3.. யாஷ் ஜோடியாக நடிக்க விரும்பும் டாப் பாலிவுட் ஹீரோயின்கள்!
இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் ஆன படங்களில் ஒன்று யாஷ் நடித்த கேஜிஎப் 2. இந்த படம் ஹிந்தியில் மட்டும் மிக அதிக அளவில் 430 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் அடுத்த பாகமான KGF 3 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்தாலும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது யாஷ் மற்றும் இயக்குனர் பிரஷாந்த் நீல் ஆகியோரின் கால்ஷீட் பொறுத்து தான் அமையும் என தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.

தூது அனுப்பும் நடிகைகள்
இந்நிலையில் மூன்றாம் பாகத்தில் யாஷ் ஜோடியாக நடிக்க பல முன்னணி பாலிவுட் ஹீரோயின்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக தயாரிப்பு நிறுவனத்திற்கு தூது அனுப்புகிறார்களாம்.
இரண்டாம் பாகத்தை போலவே மூன்றாம் பாகத்திலும் பல முன்னணி ஹிந்தி சினிமா பிரபலங்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போது KGF 3 படம் ஸ்கிரிப்டிங் நிலையில் தான் இருக்கிறது, அதனால் யாரெல்லாம் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சன் டிவி சீரியல் மூலம் நடிக்க வரப்போகும் 90களின் நாயகன்- யார் தெரியுமா?