எதேச்சையாக தன் ஜாதி பெயரை கூறிய த்ரிஷா! சர்ச்சையாக்கும் நெட்டிசன்கள்
த்ரிஷா
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறார். அப்போது இருந்து தற்போது வரை அதே லுக்கில் இருக்கும் அவருக்கு வயசே ஆகாதா என ரசிகர்கள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் பேசப்படும் நடிகையாக மாறி இருக்கும் த்ரிஷா அடுத்து விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோ படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறார்.
ஜாதி பெயர் - சர்ச்சை
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷா பேசும்போது அவருக்கு பிடித்த உணவுகள் பற்றி கேட்கப்பட்டது, அதற்கு பதில் சொன்ன அவர் "எப்போதும் பிராமின் சவுத் இந்தியன் உணவு என்றால் அது என் வீட்டில் தான் பிடிக்கும், நார்த் இந்தியன் என்றால் ரெஸ்டாரண்டில் இருந்து ஆர்டர் செய்வேன். சைனிஸ், தாய் என பல வித உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவேன் என கூறி இருக்கிறார்.
உணவு பற்றி கேட்டால் தனது ஜாதியை பற்றி குறிப்பிட்டு பேசி இருக்கும் த்ரிஷாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இருக்கின்றனர். அதே நேரத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் பலர் கமெண்டில் பேசி வருகின்றனர்.