முதல் முறையாக திரிஷாவும் - நயன்தாராவும் ஒரே திரைப்படத்தில் நடிக்கிறார்களா.. ஹீரோ யார் தெரியுமா
திரிஷா - நயன்தாரா
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக கதாநாயகிகளாக மட்டுமே நடித்து வருபவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா.
இவர்கள் இருவரும் இன்று வரை முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தில் இருந்தால் கூட இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து நடித்ததே இல்லை. ஆனால், அந்த வாய்ப்பு முதல் முறையாக இருவருக்கும் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் 234
மணி ரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் தான் கமல் 234. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துவிட்டது.
மேலும் கமல் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்றும் அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்துவிட்டார். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க திரிஷா மற்றும் நயன்தாரா இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் திரிஷா சம்பளத்தில் இருந்த அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம்.
இதனால் கமல் 234 படத்தில் திரிஷா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நயன்தாரா நடிப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அடுத்து என்ன அப்டேட் வெளியாகப்போகிறது என்று.