இதற்கே இப்படியா? படத்தில் இன்னும் பல ஷாக்கிங் விஷயங்கள் உள்ளது.. த்ரிஷா உடைத்த விஷயம்
த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக 42 வயதிலும் வலம் வருபவர் நடிகை த்ரிஷா.
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் த்ரிஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’.
கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து திரிஷா நடனத்தில் 'சுகர் பேபி' என்ற 2-வது பாடல் மற்றும் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது.
இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்து நடித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கே இப்படியா?
இந்நிலையில், தற்போது த்ரிஷா இது குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " இதுவரை படத்தில் இருந்து ஒரு 2 நிமிட காட்சிகளை தான் பார்த்துள்ளீர்கள்.
அதற்கே இப்படி ஷாக் ஆனால் எப்படி? இன்னும் படத்தில் பல ஷாக்கிங் விஷயங்கள் உள்ளது. படத்தை பார்த்த பின் என் கதாபாத்திரம் குறித்து பேசலாம்" என்று தெரிவித்துள்ளார்.