மலையாள திரையுலகில் நுழைந்த காமெடி நடிகர் TSK .. அடித்த ஜாக்பாட்!
நடிகர் TSK
சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் TSK என்ற திருச்சி சரவணகுமார். TSK மற்றும் அசார் இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவையை காணவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
கலக்கப்போவது யாரு சீசன் 8ன் கோப்பையை வென்ற இவர் தற்போது சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் TSK.
அடித்த ஜாக்பாட்!
அந்த வகையில், சமீபத்தில் வெளியான ‘பாம்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் டிஎஸ்கே. தற்போது, இப்படம் குறித்தும் அவர் அடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், " லப்பர் பந்து படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு முதன்முறையாக என்னை தேடி வந்தது.
படத்தில் முன்னணி ஹீரோவான நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து, அவரது நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

இனி ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, ரயில் பயணம் - சென்னை ஒன்று செயலியை அறிமுகப்படுத்த உள்ள முதல்வர் IBC Tamilnadu
