Kgf 2 படத்தில் ராக்கி அம்மாவாக நடித்தவர் தமிழில் இப்படியொரு சீரியல் நடித்துள்ளாரா?- யாருக்கு தெரியும்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது Kgf 2. இப்படத்தால் நாயகன் யஷ்ஷை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இப்போது இன்னொரு பிரபலம் மக்களிடம் பிரபலமாகியுள்ளார்.
Kgf 2வில் அர்ச்சனா
இந்த படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்தவர் அர்ச்சனா. கதக் நடன கலைஞரான இவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்துள்ளார். அண்மையில் இவர் நாயகன் யஷ்ஷுடன் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறுது.

தமிழ் சீரியலில் அர்ச்சனா
ஸ்ரேயாஸ் உடுப்பா என்பவரை அர்ச்சனா திருமணம் செய்திருக்கிறார், இவர்களின் புகைப்படமும் இப்போது ரசிகர்களிடம் அதிகம் வைரலாகிறது. கன்னட சினிமாவில் மட்டுமே அதிகம் பணிபுரிந்துள்ள அர்ச்சனா தமிழிலும் ஒரு சீரியல் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த சுப்புலட்சுமி என்ற தொடரில் தான் அவர் நடித்துள்ளார். ஆனால் சீரியல் ஏதோ காரணங்களால் அப்படியே டிராப் ஆனது.

கேஜிஎப் 2 'ரமிகா சென்' நடிக்க வரும் முன் இந்த வேலை செய்தாரா! ஷாக் தகவல்