தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை வெளியிடும் ரெட் ஜெயிண்ட், உதயநிதி ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொடர்ந்து தனது ரெட் ஜெயிண்ட் நிறுவனம் சார்ப்பில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி கடைசியாக வெளியான ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தான் வெளியிட்டு வருகிறது.
எச்சரிக்கை
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அவரின் மகன் ரெட் ஜெயிண்ட் சார்ப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியிடுவது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியிருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் செய்துள்ளார்களாம்.
இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மொத்த குழுவையும் அழைத்து பெரிய திரைப்படங்களை வெளியிடுங்கள், பெரிய நட்சத்திரத்தின் திரைப்படங்கள் தயாரிங்கள், ஆனால் எல்லா திரைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என எச்சரித்துள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வயதான தோற்றத்தில் ஆளே மாறிய நடிகர் கார்த்தி!

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
