வலிமை திரைப்படம் ஹிட் ஆனதா இல்லையா ! முக்கிய சினிமா பிரமுகர் அதிரடி பதில்..
அஜித்தின் வலிமை
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை.
இரண்டாவது முறையாக அமைந்த வினோத் மற்றும் அஜித் கூட்டணியால் வலிமை படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
மேலும் வலிமை படத்தின் தெளிவான விமர்சனங்கள் யாருக்கும் தெரியவில்லை, பலரும் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து வெவ்வேறு விவரங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி வலிமை திரைப்படம் இதுவரை ரூ.190 கோடிக்கும் வசூல் செய்திருக்கும் என்றும், வரும் நாட்களில் ரூ.200 கோடியை வசூல் செய்துவிடும் என ஒரு தகவல் உள்ளது.

வலிமை ஹிட் or பிளாப்
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய சினிமா பிரமுகராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம், வலிமை திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் வலிமை திரைப்படம் வெளியாகி 20 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அப்படத்தின் தற்போதைய நிலவரம் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் "வலிமை திரைப்படம் பெரிய வசூல் செய்துள்ளது, விமர்சனங்களை பொறுத்தவரை கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை வலிமை திரைப்படம் கமர்ஷியலாக பெரிய ஹிட் படம் தான்" என கூறியுள்ளார்.

ஒரே நாளில் அஜித் - விஜய் படங்களின் அப்டேட் ! யாரும் எதிர்பார்த்திராத தகவல்..