வாரிசு திரைப்படத்தையும் வெளியிடுகிறாரா உதயநிதி ஸ்டாலின்! பின்னால் இருந்து இயங்கும் ரெட் ஜெயண்ட்
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
மேலும் நேற்று நடிகர் அஜித்தின் துணிவு திரையரங்க உரிமத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாக, அப்படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோகத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அதனை 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் பெயரில் பின்னால் இருந்து செய்வதாக சொல்லப்படுகிறது.
மேலும் இதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம், பின்னால் பெயரை குறிப்பிடமால் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையுடன் காதலை உறுதி செய்த சித்தார்த்? கிசுகிசு உண்மை தானா!

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
