வாரிசு திரைப்படம் வெளியாவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை! தெலுங்கு திரைப்பட தரப்பில் வெளியான தகவல்
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது, மேலும் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு மாநிலங்களில் வெளியிட மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
பின்னர் இது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது, தமிழ் திரைப்பட பிரபலங்களும் இது குறித்து தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாவைல் எந்த சிக்கலும் இருக்காது என தெலுங்கு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாரிசு படம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தெரிவித்து இருக்கின்றனர்.
கோமாவுக்கு சென்ற சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தற்போதைய நிலை என்ன தெரியுமா