நடிகர் அவதாரம் எடுத்த வெற்றிமாறன்!! அதிகமாகும் எதிர்பார்ப்பு
ட்ரெயின்
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ட்ரெயின். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார்.
மேலும் முக்கிய ரோலில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி எனப் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார்.
நடிகர் அவதாரம்
இந்நிலையில் ட்ரெயின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல வெற்றி படங்களை கொடுத்து வரும் வெற்றிமாறன், ட்ரெயின் படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
