ஜவான் படத்தில் விஜய்.. அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள்
ஜவான்
அட்லீ முதல் முறையாக இயக்கியுள்ள ஹிந்தி திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து வெளிவந்த ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.

வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று ஒரு புறமும், நடிக்க வில்லை என கூறி மற்றொரு புறமும் பேசப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் தகவல்
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், ஜவான் படத்தில் விஜய் ஒரே ஒரு நிமிட காட்சியில் நடித்துள்ளாராம். இதை படக்குழு ஸ்க்ரெட்டாக வைத்துள்ளனர் என கூறப்படுகிறது.

மேலும் ஜவான் திரைப்படம் தமிழகம் மற்றும் கேரளாவின் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இதனால் கண்டிப்பாக வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்.. இயக்குனர் யார் தெரியுமா..
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri