லியோ படப்பிடிப்பில் விஜய்யின் தலையில் அடித்த இயக்குனர்.. அதே இடத்தில் அந்த இயக்குனரை அடித்த விஜய்
விஜய் - லியோ
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை வைத்திருக்கும் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இதில் இயக்குனர் மிஸ்கின் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை அவரே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ஹீரோ விஜய் கதாபாத்திரத்திற்கு செம அடிதடியான சண்டை காட்சி இருக்கிறதாம். அந்த சண்டை காட்சி ஏற்கனவே விருது விழா ஒன்றில் பேசியிருந்தார்.

அதன்பின், அதுகுறித்து எந்த ஒரு இடத்திலும் பேசாமல் இருந்த இயக்குனர் மிஸ்கின் தற்போது பேட்டி ஒன்றில் விஜய்க்கும் தனக்குமான சண்டை காட்சி குறித்து பேசியுள்ளார்.
அடிதடி சண்டை காட்சி
இதில் ' விஜய்க்கும் எனக்கும் செம மாஸ் சண்டை காட்சி இருக்கிறது. நாங்கள் இருவரும் சண்டை போட்டு கொண்டிருந்தபோது திடீரென தெரியாமல் விஜய்யின் தலையில் அடித்துவிட்டேன். குட்டிமா என ஓடி உடனடியாக அவரிடம் சென்று தெரியாமல் பட்டுவிட்டது என்றும் கூறினேன். விஜய் அதற்கு பரவாயில்லை என கூறிவிட்டார். எனக்கு ஒழுங்கா ரிகர்சல் கொடுக்கும்படி கூறினார்.
[
பின் அதே போல் மற்றொரு சண்டை காட்சியில் விஜய்யின் கை தெரியாமல் என்னை அடித்துவிட்டது. அதற்கு விஜய் பதறிவிட்டார், என்னிடம் சாரி என கேட்டார். நான் பரவாயில்லை செல்லக்குட்டி என விஜய்யிடம் கூறினேன்' என பேட்டியில் பேசியுள்ளார் இயக்குனர் மிஸ்கின்.
தெலுங்கில் மட்டுமே லியோ இத்தனை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..! வேற லெவல் மாஸ் காட்டும் விஜய்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri