வெங்கட் பிரபுவுக்கு போன வருடமே ஓகே சொன்ன விஜய்! தளபதி 68 ரகசியத்தை சொன்ன இயக்குனர்
தளபதி68
லியோ படத்திற்கு பிறகு விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி சேர போகிறார் என பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவந்து இருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக தயாரிப்பதாக தெரிவித்து இருக்கிறது.
மேலும் 20 வருடங்கள் கழித்து யுவன் ஷங்கர் ராஜா விஜய்க்காக இசையமைக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
போன வருடமே உறுதியான படம்
வெங்கட் பிரபு கடந்த வருடமே இந்த கதையை சொல்லி விஜய்யிடம் ஓகே வாங்கிவிட்டாராம். தற்போது 10 மாதங்களுக்கு பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
அந்த சந்திப்பின் போது வெங்கட் பிரபு - விஜய் இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டிருக்கின்றனர். போட்டோவை இப்போது வெளியிட வேண்டாம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு வெளியிடுங்க என விஜய் கேட்டுக்கொண்டாராம்.
அதன்படி தற்போது வெங்கட் பிரபு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் விஜய் வசந்தின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? அழகிய குடும்பத்தின் புகைப்படம் இதோ

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
