தோனி தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிகர் விஜய் ஒகே சொல்லததற்கு காரணம் ! என் தெரியுமா?
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது.

இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட தயாரிப்பில் இறங்க இருப்பதாகவும், அவர்களின் முதல் திரைப்படமே நடிகர் விஜய்யின் திரைப்படம் தான் என சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது தோனி தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதற்கிடையே அந்த நிறுவனம் விஜய்யின் திரைப்படத்தை தயாரிக்க அணுகியபோது அவர் மூன்று வருடங்கள் கால்ஷூட் மற்ற நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் நடிகர் ஹரிஷ் கல்யான் நடிக்கும் திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் உடனே திரைப்பட தயாரிப்பில் இறங்க திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு திரைப்படம்! அதிகாரபூர்வமாக மோதலை அறிவித்த தயாரிப்பாளார்