நடிகர் விஜயின் அரசியல் ஆலோசகர் இவரா ! பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்..
பிஸியான நடிகர் விஜய்
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஏப்ரல் தொடக்கத்திலே ஆரம்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜயின் அரசியல் ஆலோசகர்
இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவர் குறித்த விதவிதமான போஸ்டர்களை ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி 2026-ன் முதல்வர் வேட்பாளர் விஜய் என ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது.
அதில் 2026-ல் முடிவெடுத்தால் விஜய் முதல்வர் என்றும், பிரஷாந்த் கிஷோர் 2026-ல் விஜய்யின் அரசியல் ஆலோசகர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
RRR திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது, தெரியுமா?

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri
