விஜய், அஜித் என அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து விஜய் சேதுபதியின் பதில் !
விஜய் சேதுபதியின் பதில்
விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் சேதுபதி பங்குபெற்று வருகிறார்.
அப்படி அவர் பங்குபெற்ற பேட்டி ஒன்றில் நடிகர்களின் சம்பளம் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.
"இந்த கமெண்ட்-யை நீங்களே சொல்லவே கூடாது, உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் அவர்களை கமிட் செய்யவே போவதில்லை. இது போகுற போக்கில் விளம்பரத்திற்காக பேசுவது. அது அந்தக்கணக்கில் வராது.
நடிகர்கள் ஒரு கணக்கு போட்டு ஒரு சம்பளத்தை கேட்கிறார்கள். உங்களால் அதை தர முடியவில்லை என்றால் வேறு நடிகரிடம் செல்லப்போகிறீர்கள். இதே போல நான்கு பேர் சென்று விட்டால், அந்த நடிகர் தானாக தனது சம்பளத்தை குறைத்து விட போகிறார்.
சம்பளம் என்பது நடிகர்களின் விருப்பம். இந்த எண்ணங்களை முதலில் விதைப்பதே தவறு. அது குட்டி வேறு போடுகிறது.” என பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்திய இயக்குனர் ஷங்கர் ! அதிர்ச்சி தகவல்..