நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த விஜய் சேதுபதியின் திரைப்படம் ரிலீஸுக்கு தயாரானது !
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் ஏகப்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் விஜய் சேதுபதி VJS46 திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என தெரியவந்துள்ளது.
அடுத்தடுத்து விஜய் சேதுபதி திரைப்படங்கள் ரிலீஸிற்கு தயாராகவுள்ளது, அதன்படி ஏற்கனவே விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
விரைவில் மாமனிதன்
இதனிடையே தற்போது அவரின் மேலும் ஒரு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ஆம் சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் நடித்திருந்த மாமனிதன் எப்பயோ வெளியாகியிருக்க வேண்டியது.
ஆனால் தற்போது அப்படத்தை வெளியீட முடிவு செய்துள்ளனர், அதன்படி இப்படத்தை வெளியிடவுள்ள RK சுரேஷ் மாமனிதன் திரைப்படம் வரும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.
நீங்கள் பார்த்து ரசித்த தமிழ் சினிமாவின் மாஸ் வசனங்கள்..

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
