ஜவான் படத்திற்கு விஜய் சேதுபதி சம்பளம் இத்தனை கோடியா! பல ஹீரோக்களை விட அதிகம்
விஜய் சேதுபதி அடுத்து பாலிவுட்டில் களமிறங்க இருக்கிறார். அவர் அட்லீயின் ஜவான் படத்தில் அடுத்து வில்லனாக நடிக்கிறார்.
சென்னையில் ஷூட்டிங்
தற்போது ஜவான் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. அட்லீ இயக்கும் படம் இது என்பதால் இதில் தளபதி விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. விரைவில் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியும் ஷாரு காணும் பங்கேற்கும் காட்சிகள் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி சம்பளம்
தற்போது விஜய் சேதுபதி ஜவான் படத்திற்காக வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்திருக்கிறது. அவர் 21 கோடி ருபாய் சம்பளமாக பெறுகிறார் என்றும், அவரது கெரியரில் இதுதான் அதிகபட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பல முன்னணி நடிகர்களை விட விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் அதிகம் தான் என்பது குறிப்பிடப்பதக்கது. விஜய் சேதுபதி விக்ரம் படத்திற்கு பிறகு தான் தற்போது சம்பளத்தை அதிகரித்து 21 கோடி பெறுகிறார்.

ஏர்போர்ட்டில் பதறிப்போன ராஷ்மிகா! அப்படி என்ன நடந்தது.. வைரலாகும் வீடியோ
ஆப்பிரிக்காவில் மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு - ஜனாதிபதி பதவி நீக்கபட்டதாக அறிவித்த இராணுவ வீரர்கள் News Lankasri
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu