விஜய்யை விமர்சித்து வைக்கப்பட்ட அஜித் பட பாடல் ! இயக்குனரே அளித்த பதில்..
உச்ச நட்சத்திரங்கள்
தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.
மேலும் சினிமா ரீதியான போட்டி இவர்கள் இருவருக்கும் இடையே எப்போதுமே இருந்தது உண்டு. அப்படி அஜித் நடித்த அட்டகாசம் படத்தில் "உனக்கென்ன உனக்கென்ன" பாடல் பெரிய விஜய்யை விமர்சித்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனிடையே அட்டகாசம் படத்தின் இயக்குனர் சரண் இப்பாடல் குறித்த சர்ச்சைக்கு பேட்டி ஒன்றில் பதிலித்துள்ளார்.

விஜய் எதிர்த்து பாடிய பாடல் !
அவர் கூறியதாவது "அப்போது விஜய்,அஜித் இருவரும் அவர்களின் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்களில் திரும்பி பார்க்கக்கூட நேரமில்லாமல் நடித்து வருகிறார்கள்.
எதிர்ப்பு என்பது இருவருமிடையே இல்லை. ஆனால் அஜித்துடன் நான் இருந்துளேன், அவரை எத்தனை பேர் காயப்படுத்தியுள்ளார்கள், வர விடாமல் தடுக்க என்னென்ன வேலைகள் செய்துள்ளார்கள் என எனக்கு தெரியும்.
பொதுவாக சொல்லம்படியாக தான் உனக்கென்ன என வைத்தோம், ஆனால் மக்கள் அதை விஜய் எதிர்த்து அஜித் படுவதாக எடுத்துக்கொண்டார்கள்" என பேசியுள்ளார்.
