சென்னையில் மட்டுமே 10 நாட்களில் கமல்ஹாசனின் விக்ரம் இவ்வளவு வசூலா?- தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ்
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைக்கும் என மக்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை என்று தான் கூற வேண்டும்.
2 வருடங்களுக்கு பிறகு கமல் நடிப்பில் படம் வெளியாவதால் சாதாரணமாக ஓடும் என தான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் படம் செய்யும் சாதனையே வேறு, 10 நாட்களில் உலகம் முழுவதும் படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
தமிழகத்தில் கூட ரூ. 125 கோடிக்கு மேல் வசூலித்து டாப் தமிழக வசூல் படங்களின் லிஸ்டில் ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறது.

சென்னையில் பட வசூல்
உலகம் முழுவதும், தமிழகத்திலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் இப்படம் சென்னையில் மட்டும் 10 நாட்களில் ரூ. 11.88 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் படம் சென்னையில ரூ. 1.03 கோடி வரை வசூல் செய்துள்ளது.
வெளிநாடுகளில் மட்டுமே படம் ரூ. 100 கோடியை எட்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அதிரடி மாஸ் வசூல் வேட்டை நடத்திய நடிகர் கமல்ஹாசனின் விக்ரம்- செம கலெக்ஷன்