தமிழகத்தில் அதிரடி மாஸ் வசூல் வேட்டை நடத்திய நடிகர் கமல்ஹாசனின் விக்ரம்- செம கலெக்ஷன்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.
ஆரம்பத்தில் படம் எப்படி இருக்கும், வசூல் வேட்டை நடத்துமா என ரசிகர்கள் கொஞ்சம் யோசித்தாலும் இப்போது படம் அதிரடி வசூல் வேட்டை நடத்துகிறது. ரிலீஸ் ஆன நாள் முதல் எல்லா இடத்திலும் நல்ல வசூல் தான்.
ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 300 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
அதிலும் கேரளாவில் இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகரின் படமும் செய்யாத சாதனையாக படம் ரூ. 30 கோடி வரை அங்கு மட்டுமே வசூலித்துள்ளதாம்.

தமிழக வசூல்
படம் ரூ. 100 கோடி தாண்டி 10 நாட்களில் ரூ. 125 கோடி வரை வசூலித்துள்ளது.
அதாவது டாப் தமிழக வசூல் படங்களின் லிஸ்டில் இதுவரை விக்ரம் செய்த வசூலை வைத்து பார்க்கையில் 6வது இடத்தில் உள்ளது, வரும் நாட்களில் விக்ரம் படத்திற்கான இடம் மாறும் என கூறப்படுகிறது.
தமிழ் படங்களில் கமல்ஹாசனின் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- ரஜினி, விஜய், அஜித் படங்கள் கூட இல்லை