இரண்டு வாரங்களில் சென்னையிம் மட்டும் விக்ரம் செய்த மாபெரும் வசூல் ! இத்தனை கோடியா ?
விக்ரம் படத்தின் இரண்டு வார வசூல்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றியடைந்துள்ளது.
விக்ரம் திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இப்படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் விக்ரம் அனைத்து திரைப்பட சாதனைகளையும் முறியடிக்கும் என பதிவிட்டு இருந்தார்.
அதன்படி விக்ரம் திரைப்படம் தற்போது வரை உலகளவில் ரூ.345 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடி வசூல் கிளப்பில் இணையும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் தற்போது 2 வார முடிவில் விக்ரம் திரைப்படம் சென்னையில் மட்டும் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படம் சென்னையில் மட்டும் ரூ.13.23 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வேலை மட்டும் சாப்பாடு, வீடு விடாக சோப் விற்கும் பிரபல நடிகை- சோகத்தின் உச்சம்