ஒட்டுமொத்த தமிழ் திரைப்படங்களையும் முந்திய விக்ரம் ! இங்கு இனி கமல் தான் No.1..
விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திரைப்படம் விக்ரம்.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து இருந்தனர்.
அந்த வகையில் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தியும் செய்யும் வகையில் விக்ரம் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியை கண்டுள்ளது.
மேலும் தமிழகத்தை தாண்டி விக்ரம் திரைப்படம் பெரிய வசூலை குவித்து வருகிறது, அதன்படி தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்ட வசூல் சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறது விக்ரம்.

கேரளாவில் மாபெரும் வெற்றி
ஆம், கேரளாவில் விக்ரம் திரைப்படம் தற்போது வரை ரூ.20 கோடிக்கும் மேல் வசூலை குவித்து இருக்கிறது. இதை வைத்து பார்க்கையில் விக்ரம் திரைப்படம் விரைவில் கேரளாவில் அதிக வசூலை குவித்த திரைப்படமாக ஆகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக அங்கு வெளியான எந்த ஒரு தமிழ் திரைப்படமும் எந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படத்தில் விக்ரம் Vs ரோலக்ஸ்.. கமல் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்! வீடியோ இதோ