முக்கிய இடத்தில் ரஜினி, விஜய் பட சாதனைகளை முறியடித்து ஆல்டைம் ரெக்கார்ட் செய்த விக்ரம்- தெறி வசூல்
தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக விக்ரம் படம் மூலம் வலம் வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கமல்ஹாசனை வைத்து இயக்கியுள்ள இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் தாண்டி தற்போது ரூ. 300 கோடிக்கு வசூலித்து வருகிறது.
தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடியை எட்டிவிட்டது படம், விரைவில் படம் 150 கோடிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னையில் கூட படம் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது.

எல்லா இடங்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை தான் எனவே படக்குழு செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீலி மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இருவரும் கமல்ஹாசனுக்கு விக்ரம் பட வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
இப்படம் எல்லா இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தும் விக்ரம் கேரளாவில் ஆல்டைம் ரெக்கார்ட் செய்துள்ளது. ரூ. 30 கோடிக்கு மேல் வசூலுக்க மாஸ் வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுமண தம்பதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?