நடிகர் கமலின் திரைபயணத்தில் No.1 திரைப்படமாக அமைந்த விக்ரம் ! வசூல் சாதனை
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் விக்ரம், சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஒப்பனிங்-யை பெற்றுள்ளது.
மேலும் உலகளவிலும் விக்ரம் திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் விக்ரம் திரைப்படம் அனைத்து தமிழ் திரைப்படங்களில் வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் USA-வில் செய்துள்ள வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படம் USA-வில் இரண்டாம் நாளில் மட்டும் $501K அரை மில்லியன் டாலர் வசூலை குவித்துள்ளது.
இதன் மூலம் விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் USA-ல் அதிக வசூலை குவித்த திரைப்படமாக மாறியுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய கதிர் - முல்லை! பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிர்ச்சி ப்ரோமோ