11 நாட்களில் விக்ரம் திரைப்படம் சென்னையில் வசூலித்தது இவ்வளவா?
தமிழ் சினிமாவில் இந்த வருடம் ரிலீஸ் ஆன பெரிய நடிகர்களின் படங்களில் அதிக வேட்டை நடத்தி வருகிறது கமல்ஹாசனின் விக்ரம்.
அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த வருடம் ரிலீஸ் ஆனது, ஆனால் நல்ல வசூல் வேட்டை விக்ரம் திரைப்படம் மட்டுமே செய்கிறது.
படம் ரிலீஸ் ஆன 11 நாட்களில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 310 கோடி வரை வசூலித்துள்ளது.
தற்போது சென்னையை பொறுத்த வரையில் படம் இதுவரை ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது.
வரும் நாட்களிலும் படத்தின் வசூல் நன்றாகவே இருக்கும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது, இப்படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக மற்ற நடிகர்களின் பட ரிலீஸ் தேதி கூட மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
11 நாட்கள் ஆனது, விக்ரம் இதுவரை உலகம் முழுவதும் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
