கேரளாவில் எந்த ஒரு திரைப்படமும் செய்திராத வசூல் சாதனையை படைத்த விக்ரம்..
கேரளாவில் புதிய மைல்கல்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
பெரிய எதிர்ப்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைவரிடமும் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்ப்பார்தது, அதன்படி அனைவரின் எதிர்ப்பார்பையும் பூர்த்தி செய்யும் வகையில் விக்ரம் சிறந்த விமர்சனங்களை பெற்றது.
மேலும் தற்போது வரை விக்ரம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது இனி வரும் நாட்களில் இதை விட காலெக்ஷனை இப்படம் செய்யும் என எதிர்ப்பார்க்க படுகிறது.
அதுமட்டுமின்றி தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் வசூலை குவித்து வரும் திரைப்படம் கேரளாவில் படைத்துள்ள மிக பெரிய சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி விக்ரம் திரைப்படம் கேரளாவில் மட்டும் தற்போது வரை ரூ.25 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது, இதுவரை வெளியான எந்த ஒரு தமிழ் திரைப்படமும் எவ்வளவு பெரிய வசூலை குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா திருமணத்தை பார்க்க 700 கிமீ பயணம் செய்து வந்த ஜோடி, என்னாச்சு பாருங்க