விக்ரம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட De-aging காட்சிகள் ! காரணம் சொன்ன லோகேஷ்..
மாபெரும் வரவேற்பு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்து பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
பான் இந்தியா திரைப்படமாக விக்ரம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அதனை பூர்த்தி செய்யும் வகையில் விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தாண்டி அனைத்து இடங்களிலும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இயக்குநர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பல பேட்டிகளில் கலந்து கொண்டு விக்ரம் படம் குறித்த பல்வெறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

நீக்கப்பட்ட De-aging காட்சிகள்
அதன்படி விக்ரம் திரைப்படம் வெளியாகும் முன்பே அப்படத்தில் De-aging தொழிலிநுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் படத்தில் அதுபோன்ற காட்சிகளே இடம் பெறவில்லை.
இதனிடையே தற்போது இந்த விஷயம் குறித்து பேசியுள்ள லோகேஷ் , விக்ரம் படத்தில் De-aging தொழில்நுட்பம் பயன்படுத்தி, கமலை இளமையாக காட்டும் காட்சிகள் இடம் பெற்றதாகவும்.
அந்த பணி முடிய தாமதம் ஆனதால், அதை படத்தில் பயன்படுத்த முடியவில்லை. மேலும் 6 மாதங்களுக்கு பிறகு அதனை Exclusive காட்சியாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயாவின் மகளுக்கு நடந்த காதணி விழா, ரசிகர்களை கவர்ந்த கியூட் புகைப்படங்கள்... Shriya Saran