தமிழ் படங்களில் கமல்ஹாசனின் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- ரஜினி, விஜய், அஜித் படங்கள் கூட இல்லை
நடிகர் கமல்ஹாசன் நடிப்புக்கு பெயர் போன ஒரு பிரபலம். இதுவரை இவர் நடித்த படங்களை படங்களாக பார்க்காமல் ஒரு புத்தகம் போல் அதில் இருந்து நிறைய கலைஞர்கள் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
இப்படி பல பிரபலங்கள் மேடையில் கூற கேட்டிருப்போம். அப்படிபட்டவர்கள் சில இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.
இதில் கமல்ஹாசனை தாண்டி விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என நிறைய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
படத்தின் வசூல்
படம் வெளியாகி நேற்றோடு 10 நாட்கள் ஆகிவிட்டன, வசூலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கோடி கோடியாக வசூலிக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை படம் ரூ. 300 கோடி வரை வசூலித்திருக்கிறது.
தற்போது என்ன தகவல் என்றால் கேரளாவில் படம் ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இப்படி ஒரு வசூலை எட்டியது இல்லையாம்.
விக்னேஷ் சிவனின் அம்மாவை தெரியும், அவரது தங்கையா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
