சென்னையில் முதல் நாளில் கமல்ஹாசனின் விக்ரம் செய்த தெறி வசூல்- செம கலெக்ஷன்
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களில் நடிக்காமல் இருந்தார். காரணம் இடையில் அரசியல், பிக்பாஸ் என பிஸியாகவே இருந்துவிட்டார்.
அப்படியும் இந்தியன் 2 படத்தை தொடங்கி நடித்துவர இடையில் பிரச்சனை ஏற்பட்டதால் படம் அப்படியே நின்றுவிட்டது. விரைவில் அப்பட படப்பிடிப்பு தொடங்கும் என அவரே சில நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் தான் இளம் இயக்குனர் லோகேஷ் கைவண்ணத்தில் உருவான விக்ரம் கதையில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விமர்சனங்கள் எல்லாம் அமோகமாக வந்துள்ளது.
சென்னை வசூல்
தமிழ் படங்களுக்கான வசூல் நிலவரத்தில் முக்கியமாக பார்க்கப்படும் சென்னையில் விக்ரம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வந்துள்ளது. அதாவது படம் முதல் நாளில் ரூ. 1.71 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
USAவில் முதல் நாளில் கமல்ஹாசனின் விக்ரம் இவ்வளவு வசூலா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
