3வது வார முடிவில் கமல்ஹாசனின் விக்ரம் செய்த இதுவரையிலான முழு வசூல் எவ்வளவு?
சிறிய இடைவேளைக்கு பிறகு ஆரம்பிக்கலாமா என தனது வசூல் வேட்டையை தொடங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அரசியல் சின்னத்திரை என பிஸியாக இருந்த அவர் இப்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் நிறைய உழைப்பை போட்டு எடுத்துள்ள விக்ரம் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.
பட வசூல் விவரம்
தமிழகத்தில் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கில் உருவான பாகுபலி 2 படம் தான் தமிழக வசூலில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது 3 வார முடிவில் அந்த வசூல் சாதனையை முறியடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இப்போது சென்னையில் கூட படம் ரூ. 15 கோடியை நோக்கி வசூலித்து வருகிறது.
இப்படி சென்னை, தமிழகம் என வசூல் வேட்டை நடத்திவரும் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் 3 வார முடிவில் ரூ. 360 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா தங்களது தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?