விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் மொத்தமாக இத்தனை கோடி வசூலிக்குமா ! இமாலய வெற்றி..
விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க வசூலை குவித்து வந்தது.
அதன்படி மக்கள் அனைவரும் கொண்டாடிய விக்ரம் திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. இதன்முலம் தமிழில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது விக்ரம் திரைப்படம்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாகுபலி 2 திரைப்படம் தான் அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வந்தது. அதனை முறியடித்து தற்போது விக்ரம் திரைப்படம் தான் டாப் இடம் பிடித்துள்ளது.
இதனிடையே தற்போது 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக தமிழகத்தில் ஒடிக்கொண்டு இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் காலெக்ஷன் குறித்த தகவலை முத்த பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
ஆம், தற்போது வரையில் தமிழகத்தில் மட்டும் விக்ரம் ரூ.173 கோடி வரை வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் 150 திரையரங்களில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கும் விக்ரம் இறுதியாக ரூ.180 கோடி வரை வசூலித்துவிடும் என தகவல் வந்துள்ளது.
கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த முக்கிய நடிகருக்கு ஏற்ப்பட்ட விபத்து!

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
