பீஸ்ட் படத்தை விட அதிக திரையரங்கில் வெளியாகிறதா கமலின் விக்ரம் !
பெரிய எதிர்பார்ப்பில் விக்ரம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமலுடன் முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர், இதுவே இப்படத்தை அனைவரும் எதிர்பார்ப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
அடுத்த மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் மே 15 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை திரையரங்குகளா !
இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் கேரளாவில் மட்டும் 400-க்கும் அதிகமான திரையரங்கில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி இப்படத்தை பல இடங்களில் எதிர்பார்த்து வருவதை மலையாள ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். மலையாள முன்னணி நடிகர் பகத் பாசில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் உடன் மேடை ஏறும் தளபதி விஜய்? லேட்டஸ்ட் தகவல்