அடிதூள் உலகம் முழுவதும் கமல்ஹாசனின் விக்ரம் இவ்வளவு வசூலித்துவிட்டதா?- செம கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் படங்கள ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதில் விக்ரம் படத்தை தாண்டி மற்ற எல்லா நடிகர்களின் படங்களும் சாதாரண வசூலை தான் பெற்றுள்ளன.
ஆனால் விக்ரம் பட வசூல் அப்படி இல்லை, நாளுக்கு நாள் படு மாஸான வசூலை பெற்று வருகிறது.
ஜுன் 3ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் 2 வார முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 140 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது, விரைவில் ரூ. 150 கோடியை எட்டும் என்கின்றனர்.
தற்போது என்ன தகவல் என்றால் உலகம் முழுவதிலும் விக்ரம் படம் புதிய சாதனை படைக்க இருக்கிறது.
இதுவரை 2 வார முடியில் படம் மொத்தமாக ரூ. 340 கோடி வரை வசூலித்துள்ளதாம், இதிலும் படம் வரும் நாட்களில் படம் ரூ. 350 கோடியை எட்டும் என்கின்றனர்.
இந்த வருடம் இதுவரை வெளியான படங்களிலேயே அதிரடி வசூல் வேட்டை நடத்தும் படமாக விக்ரம் அமைந்துள்ளது.
தமிழகத்தில் புதிய சாதனை படைக்கப்போகும் கமல்ஹாசனின் விக்ரம்- இத்தனை கோடியா?