கமல்ஹாசனின் விக்ரம் படம் இதுவரை செய்த வசூல்- சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?
கமல்ஹாசன் சில வருடங்களுக்கு பிறகு சினிமாவில் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார். ஒரு படம் நடித்தோம், பணம் வாங்கினோம் என இல்லாமல் மக்களுக்கு புதுபுது விஷயங்களை காட்ட மிகவும் ஆர்வம் கொண்டவர்.
அவரது படங்களே அவர் தொழில்நுட்பத்தில் எவ்வளவு அக்கறை எடுத்து சில விஷயங்களை காட்டியுள்ளார் என்பதற்கு உதாரணம்.
இப்போது கமல்ஹாசன் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், படம் கடந்த ஜுன் 3ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படத்தையும் ரசிகர்கள் ரிலீஸ் ஆன நாள் முதல் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தின் சென்னை வசூல்
விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை எட்டியது, இப்போது தமிழகத்திலேயே ரூ. 109 கோடி வரை வசூலித்துள்ளது.
சென்னையில் மட்டும் படம் 8 நாள் முடிவில் ரூ. 9.91 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
முடிவுக்கு வந்தது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்- கடைசி காட்சியின் அழகிய புகைப்படம் இதோ