முக்கிய லிஸ்டில் இடம்பிடித்த விக்ரம்.. விஜய்யின் இந்த சாதனையை ஓவர்டேக் செய்யுமா?
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடித்து இருக்கும் விக்ரம் படம் இரண்டாவது வாரத்தை கடந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து இருப்பதால் தற்போது நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறது.
தற்போது உலகம் முழுவதும் விக்ரம் படம் 300 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. இதன் மூலமாக இந்த பிரம்மாண்ட மைல்கல்லை கடக்கும் 4வது தமிழ் படம் என்கிற பெருமையை விக்ரம் பெறுகிறது.

300 கோடி ரூபாய் வசூலித்த படங்கள்
இதற்கு முன்பு 300 கோடி ருபாய் வசூல் சாதனையை ரஜினியின் 2.0, கபாலி, எந்திரன் மற்றும் விஜய்யின் பிகில் ஆகிய படங்கள் செய்திருக்கின்றன.
ஐந்தாவது படமாக விக்ரம் இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறது. விரைவில் மேலே குறிப்பிட்ட படங்களில் மொத்த வசூலை விக்ரம் ஓவர் டேக் செய்து டாப் 2 இடங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Vikram is the 5th Kollywood Industry film in the most elite 300+ CR WW gross club
— Kaushik LM (@LMKMovieManiac) June 13, 2022
(in order of release)#Enthiran #Kabali #2point0 #Bigil #Vikram
* #Vikram is certain to grab the alltime #2 spot behind #2point0 *@rajinikanth @actorvijay @ikamalhaasan
ஒரே ஒரு சாதனை தான் பாக்கி.. பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் விக்ரம்