விக்ரம் ரசிகர்கள் மீது போலீஸ் தாக்குதல்! சீயான் ட்விட்டரில் கொடுத்த ரியாக்ஷன்
போலீசார் தனது ரசிகர்களை காலால் எட்டி உதைத்து தாக்கியது பற்றி நடிகர் விக்ரம் பேசி இருக்கிறார்.
விக்ரம்
நடிகர் விக்ரம் இன்று திருச்சிக்கு விமானம் மூலமாக சென்றார். அவரை பார்க்க விமான நிலையத்தில் அதிகம் ரசிகர்கள் கூடினார்கள்.
கூட்டம் அதிகமான நிலையில் ஏர்போர்ட்டில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் ரசிகர்கள் கூட்டத்தை விரட்ட தடியடி நடத்தினர். மேலும் ஒரு காவலர் காலால் சிலர் எட்டி உதைக்கும் வீடியோவும் வைரல் ஆனது.
விக்ரம் வருத்தம்
இந்த சம்பவம் பற்றி விக்ரம் ட்விட்டரில் பேசி இருக்கிறார். "இன்று கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள்.'
"அதே வேளையில் சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன். #CobraTrichy" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
இன்று கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள்.#CobraTrichy
— Chiyaan Vikram (@chiyaan) August 23, 2022
அதே வேளையில் சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன். #CobraTrichy
— Chiyaan Vikram (@chiyaan) August 23, 2022
தொகுப்பாளினி டிடியின் அக்காவிற்கு இவ்வளவு பெரிய மகனா.. ஷாக் கொடுத்த டிடி