தமிழகத்தில் மட்டுமே செம வசூல் வேட்டை நடத்தியுள்ள விக்ரம்- மொத்தம் இவ்வளவா?
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான படங்களில் செம ஹிட் அடித்துள்ளது. டாப் வசூல் செய்த படங்களின் லிஸ்டில் இப்படம் ஒவ்வொரு நாளும் டாப் இடத்திற்கு வந்துகொண்டே இருக்கிறது.
இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 310 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, கேரளா, ஆந்திரா, வட மாநிலம் என படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்திற்கு கிடைத்த வெற்றி தயாரிப்பு நிறுவனம் ராஜகமல் பிலிம்ஸ் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கார் பரிசு அளித்து அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளனர்.

தமிழக வசூல்
இந்த வருடம் தமிழகத்தில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த படங்கள் குறைவு தான், ஆனால் இந்த விக்ரம் செம வசூல் வேட்டை நடத்துகிறது. தமிழகத்தில் 12 நாட்களில் படம் ரூ. 135 கோடி வரை வசூலித்துள்ளது.
விரைவில் படம் ரூ. 150 கோடிக்கு மேல் லாபத்தை பெறும் என்கின்றனர்.
ரஜினியின் 169 படம் குறித்து பிரபல நடிகரே வெளியிட்ட சூப்பர் தகவல்- நெல்சன் அதிரடி